×

ஐசிசி யு19 உலக கோப்பை பைனலில் இந்தியாவுடன் மோதுகிறது ஆஸி.

பெனோனி: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் யு19 அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலியா யு19 அணி, பைனலில் நாளை மறுநாள் இந்தியாவுடன் மோதுகிறது. வில்லோமூர் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த 2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா யு19 – பாகிஸ்தான் யு19 அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச… பாகிஸ்தான் 48.5 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அஸன் அவைஸ், அராபத் மின்ஹாஸ் தலா 52 ரன், ஷமில் உசைன் 17 ரன் எடுத்தனர். ஆஸி. தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 49.1 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. பெனோனியில் நாளை மறுநாள் நடக்கும் பைனலில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதுகின்றன.

The post ஐசிசி யு19 உலக கோப்பை பைனலில் இந்தியாவுடன் மோதுகிறது ஆஸி. appeared first on Dinakaran.

Tags : Aussies ,India ,ICC U-19 World Cup ,Benoni ,Australia U-19 ,ICC U-19 World Cup ODI ,Pakistan U-19 ,Willowmoor Park… ,ICC U19 World Cup ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...