×

எம்எஸ் தோனியின் கீழ் விளையாடுவது ஒரு பாக்கியம்: சிஎஸ்கே அணி வீரர் மகேஷ் தீக்ஷனா

எம்எஸ் தோனியின் தலைமையில் விளையாடுவது ஒரு பாக்கியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் மிஸ்ட்ரி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா கூறியுள்ளார்.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்காக அணியின் வீரர்கள் தயாராகி வருகின்ற்றனர். எம்எஸ் தோனியும் பயிற்சி செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் எம்எஸ் தோனியின் தலைமையில் விளையாடுவது ஒரு பாக்கியம் என சென்னை சூப்பர் கிங்ஸ் மிஸ்ட்ரி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். மகேஷ் தீக்ஷனா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2022ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் சிஎஸ்கே அணியின் மிஸ்ட்ரி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி அவர் குறித்து கூறியதாவது;

” தோனி பந்துவீச்சாளர்களை ஆதரிப்பவர், அவர்கள் பந்துவீச்சை எப்போது நம்புவார், ஒரு பந்து வீச்சாளர் அதிகளவு ரன்களை விட்டுக்கொடுத்தல் கூட, தோனி அவர்களை நம்புவார், தோனியின் கீழ் விளையாடுவது ஒரு பாக்கியம்” என மகேஷ் தீக்ஷனா கூறியுள்ளார்.

The post எம்எஸ் தோனியின் கீழ் விளையாடுவது ஒரு பாக்கியம்: சிஎஸ்கே அணி வீரர் மகேஷ் தீக்ஷனா appeared first on Dinakaran.

Tags : MS Dhoni ,CSK ,Mahesh Dikshana ,Chennai Super Kings ,IPL ,Dinakaran ,
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...