×

மோடி அரசின் 10 ஆண்டுகால துயரம்; ‘கருப்பு அறிக்கை’ வெளியிட்ட கார்கே: ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி

புதுடெல்லி: மோடி அரசின் 10 ஆண்டுகால துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘கருப்பு அறிக்கை’யை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுநாள் வரை கூட்டத் தொடர் நீடிக்கப்பட்டது. அன்றைய தினம் கேள்வி நேரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரம் கடந்த 2004 ஆண்டு முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார நிலை குறித்தும், 2014 முதல் 2024 வரையிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொருளாதார நிலை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிடப் போவதாக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, இன்று மோடி அரசின் 10 ஆண்டு காலத்தில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான ‘கருப்பு அறிக்கை’-யை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எதிர்கட்சிகளை சேர்ந்த 411 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது. அவர்கள் ஜனநாயகத்தை அழித்துக் கொண்டுள்ளனர்’ என்றார்.

The post மோடி அரசின் 10 ஆண்டுகால துயரம்; ‘கருப்பு அறிக்கை’ வெளியிட்ட கார்கே: ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி appeared first on Dinakaran.

Tags : Modi government ,Karke ,Union BJP Govt ,New Delhi ,Congress ,Kharge ,Gharke ,Union BJP government ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மீது பிரதமருக்கு அக்கறை, இரக்கமில்லை: காங். தலைவர் கார்கே தாக்கு