×

சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே: கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம்

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். சென்னையில் 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

The post சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே: கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Additional Commissioner ,Prem Anand Sinha ,South ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...