×

அண்ணாமலை லேகியம் விற்பதுபோல் பேசுகிறார்.. தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றால் தானே பக்குவம் வரும் : ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

மதுரை : லேகியம் விற்பவர் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஆர்.பி.உதயகுமார்,” அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது. நாங்கள் பதிலடி கொடுத்தால் அண்ணாமலை தாங்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

லேகியம் விற்பவர் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். கவுன்சிலர் பதவி கூட அண்ணாமலை ஜெயிக்கவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் பக்குவம் வரும். இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.இதனிடையே அதிமுக கூட்டணியில் பாமக இணையுமா என்ற கேள்விக்கு உரிய நேரத்தில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று ஆர்.பி.உதயக்குமார் பதில் அளித்தார். மேலும் பலரும் அதிமுகவுடன் இணைய விரும்புவதாகவும் உரிய நேரம் வரும் போது அவர்கள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

The post அண்ணாமலை லேகியம் விற்பதுபோல் பேசுகிறார்.. தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றால் தானே பக்குவம் வரும் : ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,RB ,Madurai ,Former minister ,RB Udayakumar ,Tamil Nadu ,BJP ,president ,Former ,AIADMK ,minister ,Udayakumar ,Legiam ,Dinakaran ,
× RELATED பேமெண்ட் கொடுத்தாலும் 30 பேர் கூட...