×

பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட இருக்கும் அறை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட இருக்கும் அறை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையர் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் பொது தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், தேர்வுபணிகளில் ஈடுபடுபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு நெறிமுறைகள்:
* அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைத், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கலாம்!

* எக்காரணம் கொண்டும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளராக
நியமிக்க கூடாது!

* அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படும் ஆசிரியர், தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தின் ஆசிரியராக இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்!

* அரசுப் பள்ளி ஆசிரியர்களையே துறை சார்ந்த அலுவலர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்!

* கடந்த ஆண்டு தேர்வு பணி ஒதுக்கீடு செய்யபட்ட பள்ளிகளில் நடப்பாண்டிலும் அதே பணியாளருக்கு பணிகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது.

* தேர்வு நாள் அன்று அதே பாட ஆசிரியர்கள் பறக்கும் படை அலுவலர் குழுவில் இடம்பெறக்கூடாடு என அரசு தேர்வுகள் இயக்கம தெரிவித்துள்ளது.

The post பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட இருக்கும் அறை கண்காணிப்பாளர் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Directorate of State Examinations ,CHENNAI ,Tamilnadu ,Directorate of Government Examinations ,Dinakaran ,
× RELATED சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன...