×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த மே மாதம் முதல் கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் 10-க்கும் அதிகமாக முறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், அவரது இல்லம், நண்பர்கள் உறவினர்களில் வீடுகள் என பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது.

செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் ராமேஸ்வரபட்டி என்ற இடத்தில் உள்ளது. அங்கு செந்தில் பாலாஜின் தாய், தந்தையினர் வசித்து வருகின்றனர். அங்கும் அமலாக்கத்துறையினர் ஒரு நாள் முழுவதும் சோதனை நடத்தினர்.அதன் பிறகு தற்போது, 2-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் சோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. கேரள பதிவெண் கொண்ட காரில் வந்த 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Karur ,Sendil Balaji ,Income Tax and Enforcement Departments ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில்...