சென்னை : மார்ச் மாதத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் இடம் தயாராகிவிடும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆம்னி பேருந்துகளையும் சென்னைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் இடம் முடிச்சூரில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆம்னி பேருந்துகளின் அலுவலகம் நகருக்குள் இருப்பதால் சற்று சிக்கல் எழுந்துள்ளது. பார்க்கிங் இடம் தேவை என்பது மட்டுமே ஆம்னி பேருந்துகளின் கோரிக்கை ஆகும். மார்ச் மாதத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் இடம் தயாராகிவிடும்.
நீதிமன்ற அறிவுரையை அடுத்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.கோயம்பேடு பேருந்துநிலையம் பயன்பாட்டுக்கு வந்த போதும் விமர்சனம் எழுந்தது. கிளாம்பாக்கத்தில் இருந்து தேவையான மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 முதல் 15 நிமிட இடைவெளிகளில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடர் விடுமுறை வந்தால் மக்கள் ஊருக்கு செல்வது அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தேவையான புதிய பேருந்துகளை வாங்கவில்லை. போக்குவரத்துத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச குழு அமைக்கப்பட்டுவிட்டது,” இவ்வாறு தெரிவித்தார்.
The post முடிச்சூரில் மார்ச் மாதத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் இடம் தயாராகிவிடும் : அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.