×

காதலர் தினம் நெருங்குகிறது: ஊட்டி மண் சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு திமுகவினர் ஆறுதல்

ஊட்டி, பிப்.8: ஊட்டி அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் ஜேக்கப் பிரிட்ஜோ என்பவரின் நிலத்தில் பங்களா மற்றும் கட்டிடத்தை சுற்றிலும் பிரமாண்ட தடுப்பு சுவர்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நேற்று இந்த கட்டிடத்தின் பின்புறம் தடுப்பு சுவர் கட்டும் பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த கட்டிடத்தின் பின்புறம் சுமார் 50 அடி உயரத்தில் ஒரு பழுதடைந்த பொது கழிப்பிடம் இருந்துள்ளது. இதனை ஒட்டியே தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. பிற்பகல் சுமார் 12 மணியளவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தேனீர் அருந்துவதற்காக அங்கு அமர்ந்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பழைய கழிப்பிடம் இடிந்து விழுந்துள்ளது. அப்போது, பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்கள் மற்றும் பணியில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்த வந்த ஊட்டி தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, காயமடைந்த 10 பேரை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 6 பெண் தொழிலார்கள் ஏற்கனவே மூச்சு திணறி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 பேரும் ஆகியோர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்தவுடன் நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட துணை செயலாளரும், நகரமன்ற துணை தலைவருமான ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சத்தக்கத்துல்லா, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் உள்ளனர்.

The post காதலர் தினம் நெருங்குகிறது: ஊட்டி மண் சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு திமுகவினர் ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,DMK ,Ooty ,Gandhinagar ,Jacob Bridjo ,Ooty landslide ,Dinakaran ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்