×

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்

 

முத்துப்பேட்டை, பிப். 8: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு உத்தரவின் பேரில் மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஹமீது அலி, உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இரு வார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இதில் முத்துப்பேட்டை அடுத்த வடக்குப் பள்ளியமேடு, மருதவனம், உப்பூர், மாங்குடி மற்றும் கோவிலூர் கிராமங்களில் இரு வார கோழிகள் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசி போடும் முகாம் டாக்டர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்த மருத்துவ குழுவில் கால்நடை ஆய்வாளர் சாந்தி, நிர்மலா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரசன்னா, மாதவன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரால் 1200 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது முகாமில் 6 வார வயது முதல் உள்ள கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

The post முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Drop Vaccination Camp ,Muthuppet ,Union ,Muthupet ,Tamil Nadu Government Animal Husbandry Department ,Muthupettai Union ,Regional ,Dr. ,Hameedu Ali ,Assistant Director ,Ramalingam ,Thiruvarur District ,Collector ,Charu ,Poultry Fecal Vaccination Camp ,Dinakaran ,
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு