×

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் செங்கம் பஜார் வீதியில்

செங்கம், பிப்.8: செங்கம் பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். செங்கம் பேரூராட்சியில் உள்ள பஜார் வீதியின் இருபுறமும் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டவும், சாலை அமைக்கவும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதற்காக ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையில் நில அளவையர் சேட்டு, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் காவல்துறையினர் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பஜார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் செங்கம் பஜார் வீதியில் appeared first on Dinakaran.

Tags : Sengam Bazar Road ,Sengam ,Bazar Road ,Sengam Municipality ,Sengam Bazar Street ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையோரம் கேட்பாரற்ற...