×

லாரி டிரைவர் ஏரியில் மூழ்கி பலி வேட்டவலம் அருகே

வேட்டவலம், பிப்.8: வேட்டவலம் அருகே லாரி டிரைவர் ஏரியில் மூழ்கி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே வெறையூர் அடுத்த விருது விளங்கினான் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(35), லாரி டிரைவர். இவரது மனைவி அம்மு(24). இவர்களுக்கு மோனிஷா(2) என்ற மகளும், புருஷோத்தமன் என்ற 4 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சிலம்பரசன் கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்தவர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். அப்போது அதே கிராமத்தில் உள்ள ஏரியில் சிலம்பரசன் மது குடித்து கொண்டிருந்ததை பார்த்ததாக நண்பர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை ஏரிக்கு சென்று தேடி பார்த்தபோது சிலம்பரசன் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வெறையூர் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலம்பரசனின் மனைவி அம்மு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி டிரைவர் ஏரியில் மூழ்கி பலி வேட்டவலம் அருகே appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Silambarasan ,Verayur ,Thiruvannamalai district ,Ammu ,Bali Vettavalam ,
× RELATED உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.35...