×

மாயமான டூவீலர் போலீசிடம் ஒப்படைப்பு: சிறுவர்கள் கைது

 

தேனி, பிப். 8: தேனி நகர் கோட்டைக்களம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் பிரச்சன்னா(35). இவர் தேனி நகர் மதுரை சாலையில் ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி கடை முன்பாக இவரது டூவீலரை நிறுத்தியுள்ளர். வேலைமுடிந்து வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேனி நகர் சுப்பன்தெரு திட்டச்சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் பிரசன்னாவின் நண்பர்கள் டீ அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, திருடு போன பிரசன்னாவின் டூவீலரில் வந்த 2 சிறுவர்கள் கடையில் டீ அருந்தினர். உடனே பிரசன்னாவின் நண்பர்கள் டூவீலரில் வந்தவர்களை மடக்கி பிடித்து, பிரசன்னாவிற்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து, பிரசன்னா சம்பவ இடத்திற்கு வந்து, நண்பர்களுடன் டூவீலரில் வந்தவர்களை பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிடிபட்ட சிறுவர்களை விசாரிக்கையில், பிடிபட்டவர்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டி மற்றும் கோபாலபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் பிடிபட்ட சிறுவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாயமான டூவீலர் போலீசிடம் ஒப்படைப்பு: சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Murugan ,Prachanna ,Kottakalam ,Theni Nagar ,Madurai Road, Theni Nagar ,Dinakaran ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...