×

108 ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்புகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விளக்கினர்

 

மதுரை, பிப். 8: சாலை பாதுகாப்பு மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்புகள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விளக்கமளித்தனர்.மதுரை சரக போக்குவரத்து இணை கமிஷனர் சத்தியநாரயணன் வழிகாட்டுதலின் படி நேற்று 24வது நாளாக சாலை பாதுகாப்பு மாதத்தில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து 108 ஆம்புலன்ஸ் சேவையின் துரித பணிகள் மற்றும் அவசர காலத்தில் ஓட்டுநர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள், மற்றும் விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

இதற்கு மதுரை செஞ்சிலுவை சங்கம் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வைத்து விளக்கவுரை அளித்தார். இந்நிகழ்ச்சிக்கு மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, அனிதா மனோகரன் ஆகியோர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் பயிற்றுனர் உரிமம் பெற வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் மறுபதிப்பிற்காக வந்தவர்கள் மற்றும் இதர பணிகளுக்காக வந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post 108 ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்புகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விளக்கினர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Road Safety Month ,Madurai Cargo Transport Co ,Commissioner ,Sathyanarayanan ,Dinakaran ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...