×

அமலாக்கத்துறை வழக்கு விசாரணை செந்தில் பாலாஜி மனு மீது 15ம் தேதி தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை இங்கு விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும், அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேசும் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது வருகிற 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்தார். செந்தில்பாலஜியின் காவல் பிப். 15 வரை நீட்டிக்கப்பட்டது.

The post அமலாக்கத்துறை வழக்கு விசாரணை செந்தில் பாலாஜி மனு மீது 15ம் தேதி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Department ,Chennai ,Minister ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...