×

தமிழ்வழி கல்விக்கான 20% இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம்; ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை; தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 2022 அக்டோபர் 11ல் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அவற்றில் 75 பின்னடைவுப் பணியிடங்கள் தவிர மீதி 946 இடங்களில் 20% இடங்கள், அதாவது 178 இடங்கள் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால், அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது. எனவே, தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டு சட்டத்தில் அரசு திருத்தம் செய்ய வேண்டும்.

The post தமிழ்வழி கல்விக்கான 20% இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம்; ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,Bamaga ,Tamil Nadu Medical Staff Selection Commission ,Tamil Nadu Government Hospitals ,Ramdas ,Dinakaran ,
× RELATED திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி