×

நெல்லை தொகுதியை ஒதுக்க எதிர்ப்பு நயினார் நாகேந்திரனுக்கு எதிராக மீண்டும் போஸ்டர்: சரத்குமார் போட்டியா?

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நெல்லை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில் புதுமுகம் என்ற அடிப்படையில் அவர் தனது மகன் நயினார் பாலாஜிக்கு வாய்ப்பு வழங்க கேட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்நிலையில் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதியில் அண்ணாமலைக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில் நெல்லை மக்களவை தொகுதியை நாடார் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி ‘நெல்லை நாடாளுமன்ற நாடார் சமுதாய வாக்காளர்கள்’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தொகுதியில் போட்டியிட ஆர்வமாய் காத்திருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இந்த தொடர் எதிர்ப்பு போஸ்டர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜ கூட்டணியில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு சமக தலைவர் சரத்குமார் காய் நகர்த்தி வருகிறார்.

The post நெல்லை தொகுதியை ஒதுக்க எதிர்ப்பு நயினார் நாகேந்திரனுக்கு எதிராக மீண்டும் போஸ்டர்: சரத்குமார் போட்டியா? appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,Nellie ,Sarathkumar ,Lok Sabha ,MLA ,BJP ,Nayanar Balaji ,Dinakaran ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...