×

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: மற்றொருவர் மீது கொடூர தாக்குதல்


நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இண்டியானா வெஸ்லியன் பல்கலை கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை படித்து வருகிறார்.

இவர் கடந்த 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு வாங்கி கொண்டு வீடு திரும்பும்போது ஆயுதம் வைத்திருந்த 4 பேர் அலியை துரத்தி சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முகம் முழுவதும் ரத்த காயமடைந்த சையத் மசாஹிர் அலி, என்னை காப்பாற்றுங்கள் என்று வீடியோ வௌியிட்டுள்ளார். இந்தநிலையில், அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இண்டியானா மாகாணத்தில் உள்ள ஃபர்டூ பல்கலை கழகத்தில் சமீர் காமத்(23) என்ற இந்திய மாணவர் மெக்கானிக்கல் பொறியியல் துறையில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சமீர் காமத்தின் உடல் வாரன் கவுண்டியில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்கா செல்ல விரும்பும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களிடையேயும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

The post அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: மற்றொருவர் மீது கொடூர தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : US ,New York ,America ,Syed Masahir Ali ,Hyderabad, Telangana ,Chicago, America ,United States ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்