×

நிதி பங்கீடு, நிவாரணத்தில் கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் போராட்டம்: எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

பெங்களூரு: பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி பங்கீடு, வறட்சி நிவாரணம் ஆகியவற்றில் ஒன்றிய பாஜ அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும், கர்நாடகாவிற்கான நிதியை முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்த போராட்டத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநிலம் ரூ.4.30 லட்சம் கோடி வரி வருவாய் ஈட்டுகிறது. 15வது நிதி ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு கர்நாடக மாநிலத்திற்கான வரி பங்கீட்டை குறைத்து வழங்குகிறது. தென் மாநிலங்கள் அதிகமான வரி பங்களிப்பு செய்தும், குறைவான பங்கையே திரும்ப பெறுகிறது. ஆனால் உத்தர பிரதேசம் ரூ.2 லட்சம் கோடி பெறுகிறது. கர்நாடக மாநிலம் ரூ.4.30 லட்சம் கோடி பங்களிப்பு செய்தும், ரூ.44,000 கோடி மட்டுமே திரும்ப பெறுகிறது. புறவழிச்சாலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு தருவதாக கூறிய ரூ.3000 கோடி இதுவரை விடுவிக்கப்படவில்லை. வறட்சி நிவாரணமாக ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

மாநில அரசு ரூ.870 கோடி ஒதுக்கி தாலுகா அதிகாரிகள் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவியிருக்கிறோம். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, 25 பாஜ எம்.பிக்கள் பிரதமர் மோடியிடம் பேசி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநிலத்திற்கான வறட்சி நிவாரணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.
மகதாயி, மேகதாது அணைகளுக்கான சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்காமல் ஒன்றிய அரசு இழுத்தடித்துவருகிறது. ரெய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அறிவிப்பை தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்திய முதல்வர் சித்தராமையா, கர்நாடக அரசின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

The post நிதி பங்கீடு, நிவாரணத்தில் கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் போராட்டம்: எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Karnataka ,Delhi, ,D. K. Sivakumar ,MBIs ,BANGALORE ,DELHI ,UNIFIED BAJA GOVERNMENT ,Siddaramaiah ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...