வினா டெல் மார்: சிலியின் முன்னாள் அதிபர் செபஸ்டின் பினேரா(74). இவர், பிரபல சுற்றுலா தலமான லோஸ் ரியோவுக்கு நேற்றுமுன்தினம் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்தது. தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, செபஸ்டியன் பினேரா உடலை மீட்டனர். அவருடன் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். செபஸ்டியன் மரணத்தை சிலி உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா உறுதிப்படுத்தியுள்ளார்.செபஸ்டியன் மரணத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று சிலி அறிவித்துள்ளது. விபத்தில் இறந்த செபஸ்டின் கடந்த 2010 முதல் 2014 மற்றும் 2018 முதல் 2022 வரை 2 முறை அதிபராக இருந்துள்ளார். அந்த நாட்டில் மிக பெரும் தொழிலதிபரான செபஸ்டினின் சொத்து மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
The post சிலி முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி appeared first on Dinakaran.