×

டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவின் 14 மாஜி எம்எல்ஏக்கள் பாஜவில் திடீர் ஐக்கியம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பாஜ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அக்கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி பாஜவினர் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 17 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 18 பேர் நேற்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

அதில், ‘‘கு.வடிவேல் (கரூர்), சேலஞ்சர் துரைசாமி(கோவை), பி.எஸ்.கந்தசாமி (அரவக்குறிச்சி), எம்.வி.ரத்தினம் (பொள்ளாச்சி), ஆர்.சின்னசாமி (சிங்காநல்லூர்), முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் (வலங்கைமான் ) ஆர்.தியாகராஜு (ஆண்டிமடம்), வி.ஆர்.ஜெயராமன் (தேனி), எஸ்.எம்.வாசன் (வேடசந்தூர்), பி.எஸ்.அருள் (புவனகிரி), எஸ்.குருநாதன்(பாளையங்கோட்டை), ஆர்.ராஜேந்திரன் (காட்டுமன்னார்கோயில்), செல்வி முருகேசன்(காங்கேயம்), ஏ.ரோகினி (கொளத்தூர்), கே.தமிழ் அழகன் (திட்டக்குடி), எஸ்.இ.வெங்கடாச்சலம் (சேலம்), முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி), டாக்டர் குழந்ைதவேலு (சிதம்பரம்) ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் மேற்கண்ட அனைவரும் இணைந்தனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் எம்பி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.இதில் தியாகராஜு, எஸ்.குருநாதன், தமிழ் அழகன் ஆகிய மூன்று பேரைத்தவிர மற்ற 14 பேரும் அதிமுகவின் மாஜி எம்.எல்.ஏக்கள். குழந்தைவேலு முன்னாள் எம்பி ஆவார். பாஜவில் சேர்ந்த மாஜிக்களில் ஒன்றி ரண்டு பேரை தவிர பெரும் பாலானவர்கள் கடந்த 1970, 80களில் பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவின் 14 மாஜி எம்எல்ஏக்கள் பாஜவில் திடீர் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,JP Natta ,Delhi ,New Delhi ,Lok Sabha elections ,Tamil Nadu ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...