×

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக முழுமையாக மீண்டு வருவேன்: ரிஷப் பண்ட் நம்பிக்கை

டெல்லி: டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக முழுமையாக மீண்டு வருவேன் என்று ரிஷப் பண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024க்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஐபிஎல் தொடருக்கு ரிஷப் பண்ட் முழுமையாகத் திரும்புவார் என்று டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்ட், டிசம்பர் 2022ல் நடந்த பயங்கர கார் விபத்தில் காயம் அடைந்ததால். இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி, ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய சர்வதேச போட்டிகளை அவர் தவறவிட்டார்.

மேலும் ரிஷப் பண்ட் குறித்து டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளதாவது; “ரிஷப் சரியாக விளையாடுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். நீங்கள் எல்லா சமூக ஊடக விஷயங்களையும் பார்த்திருப்பீர்கள், அவர் நன்றாக இயங்குகிறார். அவர் முழுமையாக மீண்டு என நம்புவோம்” என தெரிவித்தார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக முழுமையாக மீண்டு வருவேன் என்று ரிஷப் பண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. அதில் ரிஷப் பண்ட் தனது பாணியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக முழுமையாக மீண்டு வருவேன்: ரிஷப் பண்ட் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,Rishabh Pant ,New Delhi ,Delhi ,IPL ,ICC ,T20 World Cup 2024 ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...