×

எக் ஃபிரைடு ரைஸ்

தேவையானவை :

முட்டை – 3, கோரட்,
பீன்ஸ், பட்டாணி – 1/4 கப்,
பாஸ்மதி அரிசி – 1 கப்,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயத்தாள் – 1/4 கப்,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டையை சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் கேரட், பீன்ஸ், பச்சைமிளகாய் மற்றும் துளி உப்பு சேர்த்து அரைவேக்காடாக வதக்கி கொள்ளவும். காய்கறிகளோடு வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். இறுதியாக கிளறிய முட்டை, உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவி கிளறி சூடாக பரிமாறவும். சாஸ் அல்லது கிரேவியோடு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்

The post எக் ஃபிரைடு ரைஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!