×

முட்டை பீட்சா

தேவையானவை:

முட்டை – 3,
பிரட் – 1,
வெங்காயம் – 1/2,
குடைமிளகாய் – 1/2,
உப்பு – தேவையான அளவு,
மிளகுதூள் – 1/2 ஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்,
டொமேட்டோ சாஸ் – 2 ஸ்பூன்,
சீஸ் – தேவையான அளவு.

செய்முறை:

முட்டையை உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பிரட்டை தூளாக்கி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும். தோசைகல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றவும். பிரட் தூளை மேலே தூவி விடவும். பிரட்டி போடவும். அதன் மேல் டொமேட்டோ சாஸ் தடவவும். அதன் மேல் வதங்கிய காய்களை பரப்பவும். துருவிய சீஸை தூவி 2 நிமிடம் மூடி வைக்கவும். அருமையான எக் பீட்சா தயார்.

The post முட்டை பீட்சா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...