×

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரம்: அமர் பிரசாத் ரெட்டி, அவரது மனைவிக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்..!!

சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது மனைவி ஆகியோருக்கு நிபந்தனை உடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது இந்த பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது ஒரு பொய் வழக்கு. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரரால் அன்றாட பணிகளைக்கூட மேற்கொள்ள கூட முடியவில்லை.

எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக இருந்தால், அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (பிப்.7) ஒத்திவைத்தார். அதன்படி, வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது மனைவி ஆகியோருக்கு நிபந்தனை உடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது. கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் 10 நாட்கள் ஆஜராகி கையெழுத்திடாவிட்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

The post பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரம்: அமர் பிரசாத் ரெட்டி, அவரது மனைவிக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Amar Prasad Reddy ,Munjam ,Chennai ,Chennai High Court ,Munjamin ,Amar Amar ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...