×

சென்னை தாம்பரத்தில் மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு; போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை: சென்னை தாம்பரத்தில் மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் மேதாம்பாள் தெரு மாந்தோப்பு பகுதியில் நேற்று மாலை வழக்கறிஞர் தியாகராஜன் என்பவரது வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் முதல் தலத்தில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தாம்பரம் போலீஸ் துணை கமிஷ்னர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தார்கள்.

அப்பகுதியில் தடய அறிவியல் நிபுணர்களும் துப்பாக்கி குண்டை கைப்பற்றி தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் துப்பாக்கி குண்டு எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், இன்று காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர். இவை அனைத்தும் ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் பகுதியை பொறுத்தவரை இந்திய விமானப்படை தளம் கிழக்கு தாம்பரம் பகுதியில் இருக்கிறது. இந்திய விமானப்படை தளத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்றைய தினம் இளைஞர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டார்களா? அப்போது குண்டுகள் தவறுதலாக குடியிருப்பு பகுதிக்கு வந்திருக்குமா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post சென்னை தாம்பரத்தில் மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு; போலீசார் தீவிர விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Tambaram, Chennai ,CHENNAI ,Thiagarajan ,Mantopu ,Medambal Street, West Tambaram ,
× RELATED தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர...