×

எஸ்ஏ டி.20 தொடர்: சன்ரைசர்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி

கேப்டவுன்: இந்தியாவில் ஐபிஎல் போன்று தென்ஆப்ரிக்காவில் எஸ்ஏ 20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. .இதில் ஆடும் 6 அணிகளையும் ஐபிஎல் அணி நிர்வாகங்களே வாங்கி உள்ளன. தற்போது 2வது சீசன் எஸ்ஏ 20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டிக்கான குவாலிபயர் 1 போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதின. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மாலன் 63, கேப்டன் மார்க்ரம் 30 ரன் அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய டர்பன் அணியில் வியான் முல்டர் 38, டிகாக் 20, கிளாசென் 23 ரன் எடுக்க 19.3 ஓவரில் 106 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் இறுதிபோட்டிக்கு நுழைந்தது. அந்தஅணியின் பவுலிங்கில் மார்கோ ஜான்சன், ஒட்னியல் பார்ட்மேன் தலா 4 விக்கெட் எடுத்தனர். ஒட்னியல் பார்ட்மேன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பார்ல் ராயல்ஸ்- ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.

The post எஸ்ஏ டி.20 தொடர்: சன்ரைசர்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : SA T20 ,Sunrisers ,Cape Town ,IPL ,India ,SA20 ,South Africa ,SA20 series ,Dinakaran ,
× RELATED ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்;...