×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ம் தேதி ஸ்பெயின் புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

பிறகு நடைபெற்ற சந்திப்புகளின்போது, பிரபலமான ஹபக்லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில்­துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“தொழில்துறை வரலாறு காணாத மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6.6 லட்சம் கோடிக்காண முதலீடு ஏற்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பல நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். தற்போது ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்தார். மொத்தம் ரூ.3,440 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் லாய்டு நிறுவனத்தின் முதலீடுகள் கிடைக்கும். ஸ்பெயின் நாட்டின் முதலீடுகளை ஈர்க்க சென்ற பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ரூ.3,440 கோடி முதலீடுகள் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Spain ,Minister ,D. R. P. Raja ,CHENNAI ,D.R.P.Raja ,M.K.Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...