×

அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் 59 தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்றில் நேற்று காலை ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து அமைந்தகரை அருகே வந்துக்கொண்டிருந்த போது கடைசி இருக்கையின் கீழ் உள்ள பலகை திடீரென உடைந்தது. இதனால் அங்கு அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார்.

பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, பணிமனையை சார்ந்த பணியாளர்கள், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. தற்போது, இந்த சம்பவம் பேசும்பொருளாக உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

The post அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Minister ,Sivasankar ,Chennai Municipal Bus ,Vallalar Nagar ,Thiruvechad ,Minister ,Dinakaran ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...