×

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கைதிகள் நால்வர் இடையே மோதல்: சிறையில் ஏற்பட்ட மோதலில் மருதவேல் என்ற கைதிக்கு பலத்த காயம்!!

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறை சாலையில் 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இன்று காலை உணவு அருந்தும் இடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மருதவேல், சங்கர மூர்த்தி மற்றும் ராம் ஆகிய 3 கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மருதவேல், சங்கர மூர்த்தி ஆகிய இருவரும் 2019ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ராம்குமார் கொலை வழக்கில் இவர்கள் விசாரணை கைதியாக 5 வருடங்களாக பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர்.

இவர்கள் 3 கைதிகளும் கூட்டாளிகள். காலையில் ஏற்பட்ட தகராறில் உணவு பரிமாற வைத்திருந்த தட்டு மற்றும் அருகில் இருந்த கம்பி ஆகியவற்றால் மருதுவேலை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மருதவேலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து தகவல் வெளியாகவில்லை. இதற்கு முன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்துமனா என்பவர் சக கைதிகளால் தாக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கைதிகள் நால்வர் இடையே மோதல்: சிறையில் ஏற்பட்ட மோதலில் மருதவேல் என்ற கைதிக்கு பலத்த காயம்!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Marudavel ,Nellai Palayangottai Jail ,Palayangottai Central Jail Road ,Sankara Murthy ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...