×

கருங்கல் பேரூராட்சியில் ₹36 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்

*ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கருங்கல் : கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பேரூராட்சியில் உள்ள கக்குளம் முதல் வாய்க்கால் கரை வழியாக ஈத்தவிளை குளம் செல்லும் சாலையில் வாய்க்கால் பக்கம் கல்வெட்டு மற்றும் தேவையான இடங்களில் பக்கச்சுவர் அமைத்து சாலை மேம்பாடு செய்தல், சுண்டவிளை – முடவனான்குழி குளத்தில் பக்கச்சுவர் மற்றும் படித்துறை அமைத்து மேம்பாடு, மேலசுண்டவிளை சாலையில் கனரா வங்கியின் முன்புறம் மணி கடை அருகாமையிலிருந்து வடிகால் ஓடை மற்றும் மூடி அமைத்து மேம்பாடு செய்வது, பூயோடு புறவதட்டுவிளை சானல் பாலத்தில் இருந்து பாஞ்சிகுழி செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக சீரமைப்பது, தொழிச்சல் இருக்கலம்பாடு விவேகானந்தர் படிப்பகம் அருகாமையில் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக சீரமைப்பது, தட்டான்விளை அரசு நடுநிலை பள்ளியில் மாணவ மாணவிகள் நலன் கருதி வகுப்பறையில் டைல்ஸ், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து செய்து தரவேண்டும் என்று இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தட்டான்விளை அரசு நடுநிலை பள்ளியில் கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.9 லட்சமும், கக்குளம் முதல் வாய்க்கால் கரை வழியாக ஈத்தவிளை குளம் செல்லும் சாலையில் வாய்க்கால் பக்கம் கல்வெட்டு மற்றும் தேவையான இடங்களில் பக்கச்சுவர் அமைத்து சாலை மேம்பாடு செய்ய ரூ.6 லட்சமும், சுண்டவிளை – முடவனான்குழி குளத்தில் பக்கச்சுவர் மற்றும் படித்துறை அமைத்து மேம்பாடு செய்ய ரூ.6 லட்சமும், மேலசுண்டவிளை சாலையில் கனரா வங்கியின் முன்புறம் மணி கடை அருகாமையிலிருந்து வடிகால் ஓடை மற்றும் மூடி அமைத்து மேம்பாடு செய்ய ரூ.5 – லட்சமும், பூயோடு புறவதட்டுவிளை சானல் பாலத்தில் இருந்து பாஞ்சிகுழி செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக சீரமைக்க ரூ.5 லட்சமும், தொழிச்சல் இருக்கலம்பாடு விவேகானந்தர் படிப்பகம் அருகாமையில் செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக சீரமைக்க ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.36 லட்சம் ஓதுக்கீடு செய்தார். இதனையடுத்து நேற்று இந்த பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், துணை தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஜோபின் சிறில், ஜெஸ்டின் வினோசிங், ஆஸ்டின் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கருங்கல் பேரூராட்சியில் ₹36 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Tags : Karungal ,Rajesh Kumar ,Kakkalam ,Killiyur ,Ethavila pond ,
× RELATED கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட...