×

திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..!!

சென்னை: திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தமிழ் திரையுலகில் 1980களின் காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆனந்த். நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம் உள்ளிட்ட தமிழ் படங்களில் இசையமைத்துள்ளார். மேலும் பல்வேறு படங்களில் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான நான் அடிமை இல்லை படத்தில் ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்” பாடல் மூலம் பிரபலமானவர். ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட 10 தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளார். அவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Vijay Anand ,Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?