×

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர்


டெல்லி: பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்துள்ளார். 2022-23ல் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை; தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படுகின்றன. ராஜ்கோட் (குஜராத்), விஜய்பூர் (ஜம்மு), மதுரை (தமிழ்நாடு), அவந்திபோரா (காஷ்மீர்), ரேவாரி (அரியானா) மற்றும் தர்பங்கா (பீகார்) ஆகிய இடங்களில் உள்ள 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன.

The post நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Union minister ,Delhi ,Manchuk Mandavia ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து!