×

அதிக காளைகளை அடக்கியவருக்கு எல்இடி டிவி பரிசு நாஞ்சிக்கோட்டையில் சம்பா, தாளடி நெல் அறுவடை மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை

 

தஞ்சாவூர், பிப். 7: நாஞ்சிக்கோட்டை பகுதியில் சம்பா, தாளடி நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூரை அடுத்த நாஞ்சிக்கோட்டை அருகே ஈச்சங்கோட்டை, பஞ்சநதிக் கோட்டை, நடுவூர், ஆழிவாய்க்கால், காசவளநாடு புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, கருக்காடிப்பட்டி, பருத்திகோட்டை, சோழபுரம், செல்லம்பட்டி, உப்புண்டார்பட்டி, ஆதனக் கோட்டை உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால் நெற்பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் குன்றி போய் கதிர்கள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு சிரமங்களுக்கு பிறகு பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடாததாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் குறைந்து விட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ஏக்கருக்கு 25 மூட்டை முதல் 30 மூட்டை வரை மகசூல் கிடைத்தது. தற்போது 15 மூட்டை முதல் 20 மூட்டை வரை மட்டுமே மகசூல் கிடைத்து உள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். நெல் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் கிடைத்துள்ள மகசூல் செலவழித்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை என தெரிவித்தனர்.

The post அதிக காளைகளை அடக்கியவருக்கு எல்இடி டிவி பரிசு நாஞ்சிக்கோட்டையில் சம்பா, தாளடி நெல் அறுவடை மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Nanchikottai ,Thanjavur ,Echangottai ,Panchnadik Fort ,Madhuvur ,Azhivaikkal ,Kasavala Nadu Pudur ,Kovilur ,
× RELATED ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி...