×

காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் எம்எல்ஏ ஆய்வு

 

தா.பழூர், பிப்.7:அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு மையத்தில்,எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், இருப்பில் உள்ள உணவுப் பொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் கலியபெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரை, காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karaikurichchi Govt High School Nutrition Center MLA ,Tha.Pazhur ,MLA ,K.S.K.Kannan ,Satthunavu Center ,Karaikurichchi Government Higher Secondary School ,Tha.Pazhur Union ,Ariyalur District ,Karaikurichchi Government Higher Secondary School Nutrition Center MLA ,Dinakaran ,
× RELATED தா.பழூர் மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்