×

போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நிலங்கள் அளவீடு

 

மல்லசமுத்திரம், பிப்.7: மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர் மற்றும் அழகுராயபெருமாள் சுவாமி கோயில்களின் நிலங்கள் நீதிமன்ற உத்தரவின்படி அளவீடு செய்யப்பட்டது. மல்லசமுத்திரத்தில் உள்ள சோழீஸ்வரர், அழகுராயபெருமாள் கோயில்களுக்கு சொந்தமான அடிநிலங்கள், குறிப்பிட்ட சமுதாயத்தினரின் அனுபவத்தில் இருந்து வந்தது. அந்த நிலங்களை அளவீடு செய்து, சுவாமிகளின் பெயரிலேயே மாற்றியமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதனை aஉயர்நீதிமன்றம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி, ஈ.ஓ.,க்கள் மணிகண்டன், கிருஷ்ணராஜ், ஆர்.ஐ., மல்லிகா, வி.ஏ.ஓ., ராஜா, சர்வேயர்கள் கார்த்திகேயன், ராபியா, செந்தில்குமார், கமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் கோயிலின் அடிநிலங்கள் சர்வே எண்களை கொண்டு சிவப்பு பெயிண்ட் அடித்து அளவீடு செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இதனையொட்டி, திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர்(பொ) பாரதிமோகன் தலைமையில் எஸ்ஐக்கள் ரஞ்சித்குமார், பொன் குமார், செங்கோட்டு வேலு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நிலங்கள் அளவீடு appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Choiseswarar ,Akurrayaperumal ,Swamy ,Akgurayaperumal ,Mallasamudra ,
× RELATED ₹2.30 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்