×

டிடிவி. தினகரன் தரம் தாழ்ந்த மனிதர்; ஜெயலலிதா போட்ட பிச்சைதான் ஓபிஎஸ்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு

சேலத்தில் அதிமுக இணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஆழ்ந்த அரசியல் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். ஏற்கனவே அவர் கூறியபடி மெகா கூட்டணி அமைப்பார். தேர்தலில் வெற்றி பெறுவார். டிடிவி தினகரன் தரம் தாழ்ந்த மனிதர். அவரை பற்றி பேச விரும்பவில்லை.’ என்றார். கேள்வி: திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடியும் நிலையில், உங்களது கூட்டணிக்கு யாரும் வரவில்லை; எப்படி மெகா கூட்டணி அமைப்பார்? பதில்: இதை இறுதியாக எடுக்கும் நடவடிக்கை வாயிலாக தெரிவிப்போம்.

ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையில் போட்டியிடுவோம் என்கிறாரே? ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை முதல்வராக இருந்தவர். ஜெயலலிதா போட்ட பிச்சையில், பொது வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வந்தவர். உச்சநீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும், எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்றும், இரட்டை இலை அவருடையது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் ஓபிஎஸ் உளறிக்கொண்டிருக்கிறார். அவர் யாரை ஏமாற்ற நினைக்கிறார்? என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post டிடிவி. தினகரன் தரம் தாழ்ந்த மனிதர்; ஜெயலலிதா போட்ட பிச்சைதான் ஓபிஎஸ்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,Jayalalitha ,KP ,Munusamy ,AIADMK ,general secretary ,Salem ,Munuswamy ,Jayalalithaa ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...