×

கருங்குழி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை: பேரூராட்சி தலைவர் வழங்கினார்

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் முதன் முதலாக தொடங்கப்பட்ட கலைஞர் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டையை பேரூராட்சி தலைவர் தசரதன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் தமிழ்நாடு அரசின் கலைஞர் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் முதன் முதலாக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி 12வது வார்டு அனுமந்தபுரம் பகுதியில் நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் சங்கீதா சங்கர் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் தசரதன் கலந்துகொண்டு தனிநபர் வேலைக்கான அடையாள அட்டையிணை வழங்கினார். இதனை தொடர்ந்து, 15 வார்டுகளிலும் நேரடியாக பொதுமக்களை சந்தித்து 3,250 பேருக்கு தனிநபர் வேலைக்கான அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் பேசுகையில், ‘காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ சட்டமன்றத்தில் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என பேசியிருந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் நகர் புற வேலை திட்டத்தை தொடங்கி வைத்து செயல்படுத்தி தந்துள்ளார். இந்த திட்டத்திற்கு கருங்குழி பேரூராட்சியில் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு அரசு செய்துள்ளது. எனவே, 15 வார்டுகளிலும் சாலையோரங்களில் உள்ள புல் பூண்டுகளை அகற்றுவது, மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பது, குளங்கள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்து இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கருங்குழி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை: பேரூராட்சி தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Karunkuzhi Municipality ,Madurathangam ,Municipality ,President ,Dasharathan ,Karunkuzhi ,Tamil Nadu government ,Chengalpattu district ,Madhurantagam ,
× RELATED மதுராந்தகம் வாக்கு சாவடியில் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு