×

லாரி டிரைவர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் சென்ற லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரமுத்து மகன் ராஜேஷ். இவர், சென்னையில் உள்ள டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு, திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூர் சென்ற ராஜேஷ், மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த சிட்டியம்பாக்கம் பகுதி வழியாக காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

The post லாரி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Aramuthu ,Rajesh ,Akur village ,Arani circle ,Tiruvannamalai district ,Chennai ,Lorry ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...