×

பெருவாயில் அருகே குலதெய்வம் கோயிலுக்கு சென்றபோது கார் தீ பிடித்து எரிந்தது: அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியில் கார் ஒன்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிர் தப்பி உள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதயில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, எளாவூர், ஆரம்பாக்கம், செங்குன்றம், ஆந்திரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுப நிகழ்ச்சிக்காக மேற்கண்ட பகுதிகளில் கார், ஆட்டோ, பஸ்களில் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சொகுசு கார் பெருவாயில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, காரிலிருந்து திடீரென கருகிய நிலையில் வாசனை வந்தது. இதனால், ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி இன்ஜினை பார்த்துள்ளார். அப்போது  தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக 2 குழந்தைகள் உள்பட 7 பேரை கீழே இறங்கி காரிலிருந்து வெளியே வரவைத்துள்ளார். இதனை தொடர்ந்து கார் நின்ற இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அங்கிருந்து ஓடி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இந்த சம்பத்தை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி  தீயணைப்பு துறையினருக்கு தொலைபேசி மூலம் உடனே தகவல் கொடுத்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் டிரைவரின் சமயோஜித புத்தியால் அதிர்ஷ்டவசமாக 7 பேரும் உயிர்தப்பினர். இதுகுறித்து, தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த  கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ரவி (67) மற்றும் மனைவி இரண்டு குழந்தைகள், மருமகளுடன் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.  இதனால் கும்மிடிப்பூண்டியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது. …

The post பெருவாயில் அருகே குலதெய்வம் கோயிலுக்கு சென்றபோது கார் தீ பிடித்து எரிந்தது: அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Kulatheivam Temple ,Peruvail ,Kummidipoondi ,Peruvayal ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...