×

சென்னையில் கல்வி மாநாடு தொடக்கம் தெற்காசிய மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெற்காசிய கல்வி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, தெற்காசியப் பகுதிகளை சேர்ந்த தைவான், கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா நாடுகளை சேர்ந்த தூதரகத்தலைவர்கள், பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். , தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியரும் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசியதாவது:

நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பல்வேறு கலாச்சாரங்களை அனுபவிப்பது போல, தெற்காசிய நாடுகளின் மாணவர்களும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பார்வையிடவும், அவற்றை கற்றுக் கொள்ளவும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். மேலும் கல்வித் திட்டங்களின் மூலம் பிணைப்புகளை வலுப்படுத்துவது ஒரு தீவிர முயற்சியாக இருக்கிறது.

இந்த மாணவர்கள் கல்வி பரிமாற்றத்தின் மூலம் தெற்காசிய நாடுகளுடன் நட்பை நாம் வலுப்படுத்த முடியும். தெற்காசிய நாடுகளின் தூதரகத் தலைவர்கள், பிரதிநிதிகள் இங்கு தங்கள் கல்வித் தொடர்பான திட்டங்களை தொடங்கும் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும். மாணவர்களே நீங்கள் உங்கள் அறிவை உள்வாங்கிக் கொள்ளுங்கள், சுறுசுறுப்பாக செயல்படுங்கள், நீங்கள் கற்றுக் கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

The post சென்னையில் கல்வி மாநாடு தொடக்கம் தெற்காசிய மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,School Education Minister ,Anbil Mahesh ,South Asian Education Conference ,Tamil Nadu Integrated School Education Department ,Anbil Maheshpoiyamozhi ,Taiwan ,Korea ,Japan ,Singapore ,Malaysia ,
× RELATED சென்னையில் பள்ளி கல்வித்துறை...