×

யு-19 உலக கோப்பை பைனலில் இந்தியா

பெனோனி: ஐசிசி யு-19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. வில்லோமூர் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா யு19 – இந்தியா யு19 அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச… தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன் குவித்தது (பிரிடோரியஸ் 76, செலட்ஸ்வேன் 64 ரன்). இந்தியா யு19 அணி 11.2 ஓவரில் 32 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கேப்டன் உதய் சாஹரன் – சச்சின் தாஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்தது.

சச்சின் 96 ரன் (95 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அவனிஷ் 10, அபிஷேக் 0 (ரன் அவுட்), உதய் சாஹரன் 81 ரன் (124 பந்து, 6 பவுண்டரி) அடுத்தடுத்து வெளியேற பதற்றம் ஏற்பட்டது. எனினும், இந்தியா 48.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. லிம்பானி 13 ரன் (4 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), நமன் திவாரி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post யு-19 உலக கோப்பை பைனலில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,U-19 World Cup ,Benoni ,ICC U-19 World Cup ,South Africa U19 ,India U19 ,Willowmoor Park ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!