×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தை மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்றுகாலை தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி தை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 3ம்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இன்றுகாலை தொடங்கியது. கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்தாண்டுகளில் மாதந்தோறும் எண்ணப்படும் உண்டியல் காணிக்கையில் சுமார் ரூ.1 கோடி அளவிற்கு பக்தர்களின் காணிக்கை கிடைந்தது. சமீப காலமாக விஷேச நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் உண்டியல் காணிக்கையும் மாதந்தோறும் ₹ 2ேகாடி அளவிற்கு அதிகரித்துள்ளது. அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை முழுவிவரம் இன்றிரவு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Annamalaiyar Temple ,Swami ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை...