×

சேலம் பெரியார் பல்கலை. ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் நூல் வெளியிடுவதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என சுற்றறிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் பதவியேற்ற காலத்தில் இருந்தே முறைகேடுகள் பலவகையில் நடந்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் ஆசிரியர் சங்கம், நிர்வாக குழு சார்பில் துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. தொடர்ந்து அங்கு பணியாற்ற கூடிய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே துணைவேந்தர் கைது செய்யபட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பெரியார் பல்கலைகழகம் சார்பில், சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பெரியார் பல்கலைகழத்தில் பணியாற்ற கூடிய ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பல்கலைகழகத்தின் அனுமதி இல்லாமல் புத்தகம் வெளியிடுதல், ஊடகங்களுக்கு பேட்டியளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. புத்தகம் வெளியிட்டார், அதற்காக பல்கலைகழத்திடம் அனுமதி பெறபட்டுள்ள்ளதா? ஆம் எனில், அதற்கான நகல், இல்லை எனில் ஏன் பெறப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கோரி சுற்றறிக்கை வெளியிடபட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அங்கு பணிபுரிய கூடிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலை. ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் நூல் வெளியிடுவதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Vice ,Jaganathan ,Teachers' Union ,Management Committee ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...