×

முட்டை 65

தேவையானவை:

முட்டை – 6,
தயிர் – 1/2 கப்,
மைதாமாவு – 1 மேஜைக்கரண்டி,
கார்ன் மாவு – 1 மேஜைக்கரண்டி,
மிளகாய் தூள் – 1 1/2ஸ்பூன்,
இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவே சிறிய பாத்திரத்தில் எண்ணெய் தடவி அடித்த முட்டையை ஊற்றி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும். பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறிய பின்னர் முட்டையை தனியே எடுத்து விருப்பமான அளவில் வெட்டிக்கொள்ளவும். முதலில் அகலமான பாத்திரத்தில் மைதாமாவு, கார்ன்மாவு, மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் வெட்டிய முட்டை துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவிடவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை துண்டுகளை போட்டு சிவக்க வறுத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

The post முட்டை 65 appeared first on Dinakaran.

Tags :
× RELATED பருப்பு ரசம்