×

விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி

சென்னை: அமோனியம் வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது என தென்மண்டல பசுமை தீர்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் தொழிற்சாலையில் கடந்த 2023 டிசம்பர் 26-ம் தேதி இரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை விசாரணைக்கு எடுத்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்பாயத்தில் இன்று நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாசுகட்டுபாட்டு வாரிய தரப்பில், அமோனியா கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய நீரி, ஐஐடி, மாசுக் கட்டுபாட்டி வாரியம் சிபிசிஎல் உள்ளிட்ட குழு அமைக்கபட்டதாகவும், குழு அறிக்கையில் 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா எடுத்து சென்றதே கசிவுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதில் கூறப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் வேறு எந்த நிறுவனமும் இல்லாத நிலையில், கோரமண்டல் நிறுவனம் விபத்துக்கான பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதே விபத்துக்கான காரணம் எனவும் புகார் தெரிவிக்கபட்டது. மேலும் கசிவை தடுக்க நிறுவனத்தின் உள்ளே மட்டும் தாணியங்கி கருவிகள் பொறுத்தபட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் தானியங்கி கருவிகள் பொறுத்தபடவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அமோனியம் கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை தமிழ்கத்தில் அனுமதிக்க மட்டோம் என என்று திட்டவட்டமாக மாசுகட்டுபாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிறுவனம் தரப்பில்; 1996-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருவதாகவும், நிறுவனத்தில் இது போன்ற விபத்துகள் ஏற்படவில்லை எனவும், பாதுகாப்பு நடவடிக்கையாக 35 தானியங்கி கருவிகள் நிறுவனத்தின் உள்ளே அமைக்கபட்டுள்ளதாகவும், 150 ஒலி எழுப்பான்கள் பொறுத்தபட்டுள்ளது. எனவே மாசுகட்டுபாட்டு அறிக்கைக்கு பதில் தரவேண்டும் என கேட்டுகொள்ளபட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அமர்வு, முன்னெச்சரிக்கை விதிகளின் படி அந்த நிறுவனம் செயல்பட வில்லையா? விபத்தின் போது தானியங்கி கருவிகள் செயல்பாட்டில் இருந்ததா? நிறுவனத்திற்கு வெளியே தானியங்கி கருவிகள் செயல்பாட்டில் இல்லையா? என்ற கேல்விகளுக்கு கோரமண்டல் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,CHENNAI ,South Zone Pollution Control Board ,Coromandel ,Ennore ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...