×

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் : மும்பை ஐகோர்ட்

மும்பை : ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என்று மும்பை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கிற்கு இடைக்கால ஜாமினை உறுதி செய்தது மும்பை உயர்நீதிமன்றம். வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடன் பெற தகுதியில்லாத வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் ரூ.64 கோடி பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் : மும்பை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : CEO ,ICICI Bank ,CBI ,Chanda Kochhar ,Deepak ,Mumbai High Court ,Mumbai ,ICICI Bank Bombay High Court ,Deepak… ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...