×

பும்ரா, ஜெய்ஸ்வால், கில் செயல்பாடு சூப்பர்: சச்சின், விவிஎஸ் லட்சுமணன் பாராட்டு

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 2வது இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “இது மிக சிறப்பான கிரிக்கெட் ஆட்டமாக இருந்தது. இந்திய அணி வீரர்கள் பிரமாதமாக விளையாடி இருக்கிறார்கள். தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்’’ என்றார்.

இதேபோன்று வி வி எஸ் லட்சுமணன் வெளியிட்டுள்ள பதிவில், “பும்ரா நீங்கள் ஒரு சாம்பியன் வீரராக இருக்கிறீர்கள். அணியில் ஆதிக்கமும், மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் செய்கிறீர்கள். இந்திய பந்துவீச்சின் தலைவராக செயல்படுகிறீர்கள். தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் சமனில் இருப்பதற்கு முக்கிய காரணமாக நீங்கள் தான். அடிபட்ட பிறகு இந்திய அணி தற்போது வெற்றி பெற்றிருக்கிறது. ஜெய்ஸ்வால் ரன் எடுக்க வேண்டும் என்ற பசியை இந்த டெஸ்ட் போட்டியில் காட்டியிருக்கிறார்.

இதேபோன்று கில் தன் இயல்பான ஆட்டத்தை மீண்டும் கண்டுபிடித்து அபாரமாக ஒரு சதத்தை அடித்திருப்பதை பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை நினைத்து இந்திய அணி பெருமை கொள்ளலாம். அதேசமயம் இங்கிலாந்து அணியும் அவ்வளவு சீக்கிரமாக போட்டியை விட்டுக் கொடுக்கவில்லை. அவர்களும் போராடினார்கள் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையப் போகிறது’’ என்பதில் சந்தேகமே இல்லை.

The post பும்ரா, ஜெய்ஸ்வால், கில் செயல்பாடு சூப்பர்: சச்சின், விவிஎஸ் லட்சுமணன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Jaiswal ,Gill ,Sachin ,VVS ,Laxman ,Visakhapatnam ,India ,England ,World Test Championship ,
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு வீண் மும்பையை வீழ்த்தியது குஜராத்