×
Saravana Stores

ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒருமாதம் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்ட போது அவருடன் சேர்த்து மோகனும் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி துளசிதேவி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முதுமை, உடல் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோகனை முன்கூட்டியே விடுதலை செய்ய மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு விசாரணையின் போது, வாரம் ஒருமுறை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை உடன் மோகனுக்கு ஒருமாத காலம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HC ,Auto Shankar ,Mohan ,Chennai ,High Court ,Court ,
× RELATED அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே: நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!