×

மெட்ரோ ரயிலில் கூலித் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட புகாருக்கு மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

சென்னை: மெட்ரோ ரயிலில் கூலித் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட புகாருக்கு
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நந்தனம் சென்ற கூலித் தொழிலாளர்களை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதி மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ள மெட்ரோ நிர்வாகம், “கடப்பாறை உள்ளிட்ட கூர்மையான கருவிகளை தொழிலாளர்கள் வைத்திருந்தனர். பாதுகாப்பு விதிமுறைகளின்படி கூர்மையான கருவிகளின் முனைகள் மூடப்பட்ட பிறகு, அவர்கள் ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயிலில் கூலித் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட புகாருக்கு மெட்ரோ நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Metro administration ,CHENNAI ,Chennai Metro Rail Administration ,Chennai Central ,Nandanam ,post Metro administration ,Dinakaran ,
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...